விருதுநகர் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட பகுதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறி்ப்பு: விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 29-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக வழிபாடு நடத்த வைக்கப்படும் சிலைகள் எவ்வகையிலும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், களிமண்ணால் செய்து சுடாப்படாமலும், ராசாயன கலவை பூச்சு இல்லாமலும் இருக்க வேண்டும். மேலும், இந்த விழாவில் வழிபாடு நடத்தி முடிந்த பின் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள வழியாக ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்.
இதில், விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து சிலைகள் கல் கிணற்றில் கரைக்க வேண்டும். இதேபோல், ஆவுடையாபுரம் சிலைகள் அப்பகுதியில் உள்ள பயன்படாத கிணற்றிலும், சிவகாசி நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து வரும் சிலைகள் அனைத்தும், தெய்வானை நகரில் உள்ள பயன்படாத கிணற்றிலும், எம்.புதுப்பட்டி, மாரனேரி கிராமங்களில் இருந்து வரும் சிலைகள் மடவார்குளம் கண்மாயிலும், அருப்புக்கோட்டை பகுதியிலிருந்து வரும் சிலைகள் பந்தல்குடி சாலையில் உள்ள பெரிய கண்மாயிலும், பந்தல்குடி கிராமத்தில் இருந்து வரும் சிலைகள் அக்கிராம பெரிய கண்மாயிலும் கரைக்க வேண்டும்.
ராஜபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிலைகள் அருகில் உள்ள வடுகவூரணியிலும், அம்மாபட்டி, ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளம் பகுதியில் இருந்து வரும் சிலைகள் வரும் சிலைகள், அப்பகுதியில் உள்ள பயன்படாத கிணறு மற்றும் ஆலங்குளம் கல்குவாரியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியிலிருந்து வரும் சிலைகள் அருகில் உள்ள மடவார்குளத்திலும், கிருஷ்ணன்கோவில் சிலைகள் ராமச்சந்திராபுரம் கண்மாயிலும், குன்னூரியிலிருந்து வரும் சிலைகள் அப்பகுதி கண்மாயிலும், வத்திராயிருப்பு, கூமாபட்டி பகுதியிலிருந்து வரும் சிலைகள் மகராஜாபுரம், கூமாபட்டி கண்மாய்களிலும் கரைக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
செல்வப்பெருந்தகை பிரசாரத்தை முடக்க சதி: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

செல்வப்பெருந்தகை சிறைபிடிப்பு! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

